கோவை பக்கம் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராம் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மகன் ராகுல் பிரசாத் ( வயது 28 )சீனியர் ஆராய்ச்சி நிபுணர்,இவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம். இவர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தங்கி இருந்து ஆராய்ச்சி செய்து வருகிறார். நேற்று இவர் காரில் தனது தந்தையுடன் சாய்பாபா காலனி புது பஸ் நிலையம் அருகே சென்றார். அங்கு காரை நிறுத்தி விட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 சிறுவர்கள் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், அவரிடம் இருந்த பணம் ரூ.3,200 ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ராகுல் பிரசாத் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாய்பாபா கோவில் சேர்மராஜ் நகரை சேர்ந்த பாரத் குமார் ( வயது 17) ஸ்ரீஹரி (வயது 17) ஆகியோரை கைது செய்தனர் .இருவரும் சிறுவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.