கோவை சிங்காநல்லூர் நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 51) இவர் நேற்று தனது காரில் குடும்பத்தினருடன் மேட்டுப்பாளையம் சென்று விட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார் காரில் மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர் .துடியலூர் கவுண்டர் மில் அருகே கார் வந்த போது காரில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதனால் பிரபாகர் காரை உடனே நிறுத்தினார். காரில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். அதன் பிறகு சிறிது நேரத்தில் பிரபாகரின் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அருகில் நிறுத்தி இருந்த மற்றொரு காரிலும் தீப்பிடித்து எறிந்தது .இதை தொடர்ந்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . இது குறித்து தகவல் அறிந்ததும் கவுண்டம்பாளையம் தீயணைப்பு படையினர், வெளியே தீயணைப்பு அதிகாரி தனசேகர பாண்டியன் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு கார் முழுவதும் எரிந்து நாசமானது. ஆனால் மற்றொரு கார் மற்றொரு மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிவதற்குள் தீயணைக்கப்பட்டது .இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர. இது தொடர்பாக போலீசார் நடத்தி விசாரணையில் காரில் கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. புகை வந்ததும் பிரபாகரன் மற்றும் காரில் இருந்த மற்ற அனைவரும் உடனே கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..