கோவை மதுக்கரை மைல்கல் அருகே எல்.அன்டு .டி. பைபாஸ் ரோட்டில் நேற்று 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஒரு காரில் பயணம் செய்த நவீன் (வயது 36 )மிதுன் ( வயது 30) அவரது மனைவி ப்ரோத்விக் ( வயது 29) குருநாத் (வயது 33 )அவரது மனைவி சினேகா (வயது 32 )நவீன் மனைவி நிதா (வயது 33) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் .வழியில் காரின் முன் சீட்டில் இருந்த நவீன (வயது 35) இறந்தார்.இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரூ , அனேகல் பகுதியில் சேர்ந்தவர்கள் ஆவர்கள்.இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் கார் ஓட்டி வந்த பெங்களூரை சேர்ந்த மீதுன் ( வயது 30) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
கோவை பைபாஸ் ரோட்டில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதல் : ஒருவர் சாவு – பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம்..
