கோவை மாநகருக்கு மேலும் 2 காவல் நிலையங்கள் – காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்.!

கோவை மாநகரில் தற்போது தலா 15 சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாநகரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு தங்கி இருந்து படித்து வருகின்றனர். எனவே கோவை மாநகரில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை விரைந்து கைது செய்யவும், கூடுதல் காவல் நிலையங்கள் தேவைப்படுகின்றன. இதை அடுத்துக் கடந்த ஆண்டு கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய காவல் நிலையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காளப்பட்டி, இருகூர் ஆகிய இடங்களில் தனித் தனியாக காவல் நிலையங்கள் கேட்கப்பட்டு  உள்ளன.

தற்பொழுது பீளமேடு காவலர்கள் தான் விமான நிலையம் காளப்பட்டி வரை ரோந்து சென்று குற்ற வழக்குகளை விசாரிக்க வேண்டிய உள்ளது. இதேபோல் சிங்காநல்லூர் போலீசார் இருகூர் வரை சென்று விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதனால் அவர்களை பணி சுமை அதிகரிக்கிறது. இதை அடுத்து சமீபத்தில் கோவைக்கு வந்த உள்துறை செயலாளரிடம் மேலும் இரண்டு காவல் நிலையங்கள் கோவை குறித்து காவலர்கள் எடுத்துக் கூறினர்.

இது குறித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறும்போது:-

கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை ஆகிய இரண்டு காவல் நிலையங்களுக்கும் கனரக காவல் நிலையத்திற்கான அனுமதி கூறி உள்ளோம். இதனால் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 80 காவலர்கள் பணியில் இருப்பார்கள். இது தவிர மேலும் காளப்பட்டி ஆகிய இரண்டு காவல் நிலையங்களுக்கு அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சி எல்லையில் உள்ள வடவள்ளி, துடியலூர் ஆகிய காவல் நிலையங்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இதனை மாற்றி மாநகர காவல் கட்டுப்பாட்டில் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் இதன் மூலம் மருதமலை கோவில் வரை கோவை மாநகர கட்டுப்பாடு கீழ் கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினார்..