கோவை அன்னூர் – அவிநாசி ரோட்டில் உள்ள கஞ்சப்பள்ளி அருகே அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர் . விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த ஜடபா பெஸ்க்ரா ( வயது 32) சந்திரசேகர் பாரிக் (வயது 30 )என்பது தெரியவந்தது.இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருவதும்இந்த கஞ்சாவை ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
8 கிலோ கஞ்சாவுடன் 2 வடமாநில வாலிபர்கள் கைது..!
