காஞ்சிபுரம் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ஏமாற்றிய 2 பேர் கைது..!

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றதும் பல அதிரடி மாற்றங்களை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் செய்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்டம் முழுவதிலிருந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தனியார் நிறுவன அதிகாரிகள் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வேண்டி குவிந்து வருகின்றனர். இது பற்றிய விவரம் வருமாறு
காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று வங்கிகளில் கவரிங் நகைகளை அடமானம் வைத்து பிராடு வேலைகளில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் விவசாயிகள் பொதுமக்கள் தொழில் முனைவோர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது வியாபார அபிவிருத்திக்காக தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெறுவது வாடிக்கை. இந்நிலையில் அடகு வைத்த நகைகளை வங்கியின் மேனேஜர்கள் நகை மதிப்பீட்டாளர்கள் நகைகளின் உண்மை தன்மையை அறிய வருடா வருடம் சரி பார்க்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வாடிக்கை. இந்த நிலையில் காஞ்சிபுரம் ஏனாத்தூர் மற்றும் கம்மவார் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் நகை மதிப்பீட்டு குழு நகைகளை சோதித்துப் பார்த்தபோது அவை தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என தெரிய வந்தது. அதை வைத்து வங்கியில் கடன் பெற்றது தெரிய வந்தது .அதன் பேரில் இந்தியன் வங்கி கிளை மேலாளர் ராஜாராம் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகத்தை பார்த்து வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூபாய் 2 கோடியே 50 லட்சம் பெற்று மோசடி செய்தது அம்பலம் ஆகி உள்ளது. மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய புகார் மனுவை அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்ட் மணிமேகலைக்கு புகார் மனுவை அனுப்பி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது . இது தொடர்பாக சுரேந்திர குமார் மேகநாதன் மற்றும் பிரகாஷ் ஆகிய 3 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் . கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்
இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட அரக்கோணம் அடுத்த பள்ளூர் கிராமம் ராஜேஷ் என்பவனையும் திம்ம சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவனையும் கைது செய்தனர். இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இதற்கு மூளையாக செயல்பட்ட நம்பர் ஒன் கேடி சென்னையைச் சேர்ந்த பிரபல கேடியை தீவிரமாக தேடி வருகின்றனர் . குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர்..