தோட்டத்தில் கள் விற்ற 2 பேர் கைது..!

கோவை துடியலூர் பக்கம் வெள்ளக்கிணறு குட்டைத் தோட்டம் பகுதியில் ஒரு தோட்டத்தில் கள் விற்பனை செய்வதாக துடியலூர் போலீசாருக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று மாலை அங்கு திடீர் நடத்தினார். அப்போது அங்கு கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெள்ளக்கிணறு கார்த்திக் (வயது 26) கைது செய்யப்பட்டார். 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல என் .ஜி . ஜி. காலனியில் உள்ள ஒரு தோட்டத்தில் நடத்திய சோதனையில் 6 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அன்னூர் அருள்செல்வன் ( வயது 24)கைது செய்யப்பட்டார்.