கோவை சுந்தராபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் பிரசாந்த் ( வயது 21) லோடு மேலாக வேலை பார்த்து வந்தார்.இவரும் செட்டிபாளையம் மயிலாடும்பாறை வசந்தம் நகரை சேர்ந்த மகா தேவன் மகள் தான்யா (வயது 18) இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இந்த காதல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.சிறிது மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்து இருந்தனர்.இந்த நிலையில் தான்யாவுக்கு இன்று பிறந்தநாள் காதலன் பிரசாத், நண்பர்கள் தரணி. பிரசாத், குணசேகரன் ,அபிஷேக் ஆகியோர் நேற்று இரவில் குடிபோதையில் பைக்கில் தான்யாவின் வீட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்றனர். அவர்கள் தான்யா வீட்டில் அத்துமீறி புகுந்து கதவைத் தட்டினார்கள்.இதை தான்யாவின் தந்தை கண்டித்தார். அவர்கள் கேட்கவில்லை .இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் (வயது 29 )
தான்யாவின் தந்தை மகாதேவன் (வயது 40)ஆகியோர் சேர்ந்து அரிவாளால் பிரசாந்தை சரமாரியாக வெட்டினார்கள். இதில் பிரசாந்த் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தான்யாவின் உறவினர் விக்னேஷ் ( வயது 29) தந்தை மகாதேவன் ( வயது 40 )ஆகியோரை இன்று கைது செய்தனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது..