மோட்டார் சைக்கிளில் மொபைல் போன் பேசிக் கொண்டு தண்டவாளத்தை கடந்த 2 பேர் ஓடும் ரயில் மோதி பரிதாப சாவு – தாம்பரத்தில் பகீர் சம்பவம்..

தாம்பரத்தை அடுத்த குரோம்பேட்டை மியாட் ரயில் நிலையத்திற்கு இடையே மோட்டார் சைக்கிளில் வண்டியை ஓட்டிக்கொண்டே மொபைல் போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்கும் போது அதி வேகமாக வந்த ரயில் மோதி தூக்கி எறியப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்கள் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு சதீஷ் வயது 40 ஹீரன் நந்தினி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 2. பிரணவ் வயது 23 ராயபுரத்தில் உள்ள ஸ்டாக் எக்யூப்மென்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இறந்து போனவர்களின் பிரேதத்தை தாம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தினார்..