கோவை கணுவாய் அருகில் டீச்சர்ஸ் காலணியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் மேனகா ( வயது 22 ) பிகாம் படித்து முடித்து விட்டு வீட்டிலிருந்தார். நேற்று இவர் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது .இது குறித்து தந்தை செந்தில் வடவள்ளி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
இதேபோல ஒண்டிப்புதூர் ,சூர்யா நகரை சேர்ந்தவர் சக்திவேல் .இவரது மகள் பிரியங்கா ( வயது 16)அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். 20 ஆம் தேதி மாமா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் . இது குறித்து சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.