கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கமுள்ள ஆனைமலை, புது விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மாலிக் .இவரது மனைவி அம்சத் ( வயது 40) இவரது கணவர் மாலிக் குடிப்பழக்கம் உடையவர் .இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அம்சத் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து கணவர் மாலிக் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல ஆனைமலை கொல்லர் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி செல்வி ( வயது 42) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக செல்வி நேற்று அவருடைய வீட்டில் விட்டத்தில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து கணவர் செந்தில்குமார் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..