3010 போதை மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது..!

கோவை : போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் ராமர் ஆகியோர் போத்தனூர் 4-ம் நம்பர் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று இரவு சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 3000 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் .விசாரணையில் அவர் கரும்புக்கடை, சேரன் நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் அபுதாகிர் ( வயது 35) என்பது தெரிய வந்தது. இவர் தற்போது வெள்ளலூர், அவுசிங் யூனிட்டில் வசித்து வருகிறார்.

இதேபோல ஆர். எஸ். புரம் போலீசார் பி. என். புதூர் ,பாரதிநகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 10 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் வீரகேரளம், குறிஞ்சி நகரை சேர்ந்த விஜயகுமார் மகன் சபரி கிரி (வயது 27) என்பது தெரிய வந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..