200 கிலோ குட்கா பிடிப்பட்டது – 6 பேரை பிடித்து விசாரணை.!!

திருச்சி கே கே நகர் ஓலையூர் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வரும் நல்லுசாமி என்பவருக்கு சொந்தமான கடையிலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களான பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் நான்கு கிலோ 390 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது . இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஓலையூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரிடமிருந்து வாங்கி விற்பனை செய்ததாக கூறியதின் பேரில் மேற்படி போசாங்கு என்பவர் பயன்படுத்திய வாகனம் பொலிரோ Pickup TN45 CD 7125 மற்றும் மாருதி ஆம்னி TN31 BS 8785 ஆகிய வாகனங்களை சோதனை செய்தபொழுது அவற்றில் விற்பனைக்காக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக் குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டு 9 கிலோ 720 கிராமும் அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்த குட்கா பொருட்களிலிருந்து வழக்கு போடுவதற்காக சட்டபூர்வ மூன்று உணவு மாதிரி எடுத்தது போக மீதமுள்ள பான்பராக் குட்கா போன்ற பொருட்களையும் மேற்படி இரண்டு வாகனங்களையும், கிருஷ்ணமூர்த்தி, ஒட்டுநர் போசாங்கு மற்றும் நல்லுசாமி ஆகிய மூன்று நபர்களையும் மணிகண்டம் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டது.
மேலும் இதனை தொடர்ந்து மேற்படி போசாங்கு என்பவரை விசாரித்ததின் பேரிலும் அவரிடமிருந்து வரபெற்ற தகவலின் அடிப்படையிலும் மதியம் 2 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம் பஞ்சப்பூர் அருகே பிரபல பார்சல், அலுவலகம் சென்று கண்டெய்னர் லாரி KA01AH4849 வாகனத்தை சோதனை செய்த பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் 190 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தடைசெய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பொருட்களிலிருந்து வழக்கு போடுவதற்காக சட்டபூர்வ நான்கு உணவு மாதிரிகள் எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பட்டது. மேற்படி பார்சல் சர்வீஸ் வாகனம் KA 01 AH 4849- யும், மூன்று சட்டபூர்வ உணவு மாதிரி எடுத்தது போக மீதமுள்ள பான்பராக் மற்றும் குட்கா பொருட்களையும், மேலும், மேற்கண்ட மூன்று நபர்களையும் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா பொருட்களை விற்பனை செய்ததற்கு உடந்தையாக இருந்த பார்சல் அலுவலக மேலாளர் கருணாநிதி, ஓட்டுநர் செந்தில் போசாங்கு மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கக்கோரி எடமலைபட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார்மனு அளிக்கப்பட்டது.
மேலும் இது போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அல்லது கலப்பட உணவு பொருட்கள் கண்டறியபட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் தங்கள் தகவல் இரகசியம் காக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மாவட்ட புகார் எண் 9626839595, 9944959595, மாநில புகார் எண்: 9444042322 என உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சியில் குட்கா பிடிபட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.