தீபாவளி முடிந்து வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்ப 210 சிறப்பு பஸ்கள் இயக்கம்.!!

தீபாவளி பண்டிகைக்காக கோவையில் இருந்து 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். கோடையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது .இந்த பஸ்கள் மூலம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றனர். இது தவிர ஆம்னிபஸ்கள் ரயில்கள் சொந்த வாகனங்கள் மூலம் ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளனர். ஊர் திரும்புவர்களின் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- இன்று  ( திங்கட்கிழமை) வரை ஊர் திரும்புவர்களின் வசதிக்காக 210 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிங்கநல்லூர் பஸ் நிலையத்திலிருந்து தேனி, , மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு 160 சிறப்பு பஸ்களும் சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஊர் திரும்புவர்களின் வசதிக்காக 50 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. இது தவிர வெளி மாவட்ட போக்குவரத்து கழகங்கள் சார்பிலும் வெளியூர்களில் இருந்து கோவைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் கோவைக்கு வர முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்..