சென்னை தலைமைச் செயலகத்தில் பல ஆண்டு காலமாக ஒரு மோசடி கும்பல் சுற்றி சுற்றி வருகிறது. இந்த கும்பல் இடம் ஏமாந்தவர்கள் பல பேர் அப்படி ஏமாந்தவர்களில் ஒருவரான வேலம்மாள் வயது 71 கணவர் பெயர் தர்மராஜ். மகிழம்பூ தெரு, பூம்புொழில் நகர் ஆவடி. இவரை சந்தித்த வீடி முரளிதரன் வயது 58 தகப்பனார் பெயர் திருவேங்கடம் நாராயணசாமி நகர் மதுரை ரோடு திருமங்கலம் மதுரை மாவட்டம். ஏம்மா வேலம்மாள் உனது மருமகள் நல்லா படிச்சிருக்காங்க அவங்கள ஏன் வீட்டில் வைத்திருக்கீர்கள் தலைமை செயலகத்தில் பிஆர்ஓ போஸ்ட் வேகன்டா இருக்கு என்கிட்ட மந்திரியிலிருந்து ஐஏஎஸ் ஆபிஸர்கள் எல்லாம் என் பாக்கெட்டில் இருக்காங்க .இந்த வாரமே ஆர்டர் வாங்கி கொடுத்துடறேன் எனச் சொல்லி 2010 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ரூபாய் 22 லட்சத்தி 75000 வரை ஏமாற்றி வாங்கி உள்ளான். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேலம்மாள் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து புகாரை கொடுத்தார். ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு விசாரணையை மேற்கொண்டனர். அப்போது முரளிதரன் கால் மேல் கால் போட்டுக் கொண்டு குற்றப்பிரிவு போலீசாரிடம் உங்களுக்கு யாராவது தெரிந்தவர்கள் வேலை இல்லாமல் இருக்காங்களா நான் வேலை வாங்கிக் கொடுத்து விடுகிறேன் என ஆசை வார்த்தை கூறினான். எதற்கும் மயங்காத போலீசார் வழக்கு பதிந்து பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது . வழக்கை தீர விசாரித்த மேஜிஸ்திரேட் ஸ்டாலின் தீர விசாரித்து குற்றவாளி முரளிதரனுக்கு ரூபாய் 10,000 அபராதமும், மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 33 லட்சத்து 55 ஆயிரம் வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கினார்..