கோவை மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ‘காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் மேளா.. தொடங்கப்பட்டது .நேற்று முதல் கோவை மாவட்டத்தில் உட்கோட்டம் வாரியாக வாரந்தோறும் இந்த பணி நடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு உட்கோட்டத்திலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:-நேற்று ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் காணாமல் போன 22 நபர்களை தனிப்படையினர் தேடி கண்டுபிடித்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.காணாமல் போய் நீண்ட நாட்களாக கண்டுபிடிக்காமல் உள்ள நபர்களை தேடும் இந்த மேளா வாரந்தோரும் தீவிரமாக தொடர்ந்து நடைபெறும் .
பொதுமக்கள் இது போன்று காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்க அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகவும். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்:94981-81212, மற்றும் வாட்சப் எண் 77081-00100.. ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் காணாமல் போன 22 பேர் ஒரே நாளில் மீட்பு – தனிப்படை அதிரடி நடவடிக்கை..!
