கோவை மாவட்டத்தில் செல்போன்கள் திருட்டுப் போனதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 252 செல்போன்களை மீட்டனர்.இதன் மதிப்பு ரூ. 48 லட்சத்து 36 ஆயிரத்து 500 ஆகும். இவைகள் இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் இதை ஒப்படைத்தார். செல்போன்களை பெற்றுக் கொண்டவர்கள் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து வாங்கி சென்றனர்..
கோவையில் காணாமல் போன 252 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் இன்று ஒப்படைப்பு.!!
