கோவை சின்ன தடாகம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பிடிபட்ட 28 கிலோ குட்கா – காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி ஓட்டுனர் பணி செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் ஆனைகட்டி சாலை, சின்ன தடாகம் தண்ணீர் பந்தல் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வாகனத்தில் வந்த கிருஷ்ணகுமாரை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 28 கிலோ குட்கா புகையிலை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அருகே உள்ள தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.