கோவையில் கடந்த ஒரே ஆண்டில் 28 கொலைகள், 687 பேர் விபத்தில் பலி..

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்து மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது :- கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 28 கொலைகள் நடந்துள்ளன .இது 2023 ஆம் ஆண்டை விட 20 சதவீதம் குறைவு. அனைத்து கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .பாலியல் குற்றங்கள் ஈடுபட்டவர்கள் உட்பட 73 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு விட இது இரு மடங்கு அதிகம். கடந்த ஆண்டு மொத்தம் 2,598 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்துகளில் 687 பேர் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 8 சதவீதம் குறைவு. வாகன விதிமுறை மீறல்களில் மொத்தம் ரூ 3 கோடியே 28 லட்சத்தி 68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய வர்களிடம் இருந்து ரூ. 72 லட்சத்தி 90 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குட்கா விற்றதாக 984 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 டன் குட்கா புகையிலைப்பொருட்கள்பறிமுதல் செய்யப்பட்டது. 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.1 கோடியே 80 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக 817 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ரூ. 24 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 2 கோடியே 25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கருமத்தம்பட்டியில் ஒரு லாட்டரி வியாபாரியிடம் மட்டும் ரூ.2 கோடி 22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்றதாக 477 பேர் கைது செய்யப்பட்டு 441 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . 534 திருட்டு வழக்குகளில் 392 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் . 497 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. மொத்தம் ரு.2 கோடியே.48 லட்சம் மதிப்புள்ள திருட்டுப் போன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பாலியல் குற்றங்கள் தொடர்பாக 287 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போக்சோ வழக்குகளில் 27 பேருக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. சைபர் கிரைம் தொடர்பாக 2.749 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ரூ. 15 கோடி வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ரூ 2 கோடியே 22 லட்சம் மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது .பண மோசடி தொடர்பாக 38 பேர் கைது செய்யபட்டுள்ளனர். ரூ 10 கோடியே 76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டுப் போன 756 செல்போன்கள் மீட்டு திரும்ப உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.