கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கோவைக்கு வந்த பயணிகளை சோதனை செய்தனர். சோதனையில் 4 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை அழைத்துக் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த பயணிகள் பேண்ட் பாக்கெட்டுகள் மற்றும் உள்ளாடைகளின் அடுக்குகளுக்கு இடையே பதிக்கப்பட்ட இருந்த வெளிநாட்டு தங்கம் 3.03 கிலோ எடை உள்ள சுமார் ரூபாய் 1.9 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். அந்த நான்கு பயணிகளிடம் அரை கிலோவிற்கு அதிகமான தங்கத்துடன் இருவர் பிடிபட்டனர். பிடிபட்ட நபர்கள் விசாரணை நடத்திய போது அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன், சென்னையை சேர்ந்த சேக் முகமது என்று இரண்டு பயணிகளை கைது செய்தனர். இது குறித்து மேலும் உளவுத்துறை புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்..