கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேற்று சரவணம்பட்டி – துடியலூர் ரோடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 25 கிராம் கஞ்சா 9 கிராம் “மெத்தப்பட்ட மின் “என்ற உயர் ரக போதைபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பக்கம் உள்ள தெர்மல் நகரை சேர்ந்த செந்தில் முருகன் மகன் மணிகண்டன் ( வயது 20) கணபதி மணியக்காரன் பாளையம், எம். கே. ஜி நகரை சேர்ந்த சூர்யா (வயது 23) கடலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த விமல்ராஜ் ( வயது 21 )என்பது தெரிய வந்தது .3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையில் கஞ்சா – போதை மருந்து விற்பனை – 3 பேர் கைது..!
