ஆன்லைன் – கூரியர் மூலம் போதை மாத்திரை விற்பனை – கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது..!

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று விமான நிலையம் பக்கம் உள்ள எஸ். ஐ. எச்.எஸ் .காலனி, பிருந்தாவன் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் போது நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1,100 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் ஈரோடு சத்தியமங்கலம் பக்கம் உள்ள ரங்கசமுத்திரம் காந்தி நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் கவின் குமார் ( வயது 27 )ஈரோடு பழையபாளையம் பாரி நகரை சேர்ந்த கார்த்திக் மகன் சபரீஷ் (வயது 19) ஈரோடு, பெரியார் நகரை சேர்ந்த கார்த்திகேயன் மகன் பிரனேஷ் (வயது 19) என்பது தெரிய வந்தது. இவர்கள் மூன்று பேரும் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஆன்லைன் கொரியர் மூலம் கஞ்சா போது மாத்திரைகள் வரவழைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.