வழிப்பறி செய்த பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கைது..!

கோவை மாவட்டம்,சூலூர் பகுதியில் கடந்த 18. ந் தேதி கலங்கல் அருகே செலக்கரைசல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(வயது 42) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 1000 ரூபாயை வழிப்பறி செய்தார். இது குறித்து பழனிச்சாமி சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் . இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். இதன் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் காவலர்களைக் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு. மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட எதிரியை தேடி வந்தனர் . இந்த நிலையில் நேற்று கலங்கல் சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அன்பு செல்வம் மகன் மணிகண்டன்(வயது 22) என்பதும்,மேற்படி வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில் மேற்படி நபரை கைது செய்து அவரிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய|கத்தி -மற்றும் ரூ 1000 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மேற்படி மணிகண்டனுடன், குமார் மகன் முத்துப்பாண்டி (வயது 20) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் திருச்செல்வம் (வயது 20)ஆகியோர் சூலூர் வட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்தது. இந்நிலையில் மேற்படி இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருட்டு வழக்கில் தொடர்புடைய 2இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.