சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 கிலோ சூப்பர் கமகமக்கும் கஞ்சா பறிமுதல்.!!

சென்னை:  தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி ஆக்சன் நாயகி வனிதா ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார் . அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது சமீப காலமாக ஓடும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் கஞ்சா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாம் தூங்கி விடக்கூடாது. விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் போலீஸ் சூப்பிரண்டு அன்பு சென்ட்ரல் ரயில் நிலைய துணை சூப்பிரண்டு கர்ணன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 வது பிளாட்பார்மில் தன் பாத்தியிலிருந்து அலபி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை அதில் வந்து இறங்கிய பயணிகளை சோதனை போட்டனர் . சோதனையில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் காவலர்கள் தியாகராஜன் வெங்கடேசன் முத்து வீரப்பன் ஆகியோர் கையில் லத்தியுடன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதிஷா வயது 45 தகப்பனார் பெயர் சித்திக் குன்ஷு முசக்கானா காத் இல்லம் பொன்னை தெற்கு மல்லாபுரம் கேரளா. அவனிடத்தில் இருந்து ஆளை மயக்கும் கமகமக்கும் சூப்பர் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா உலகில் எங்குமே கிடைக்காத கஞ்சா என் வயிற்றில் மண்ணை போட்டு விட்டீர்களே குய்யோ முய்யோ என கதறி அழுதான். போலீசார் அவனை பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைதிற்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்..