கோவை மாநகரில் 15 சட்டம்- ஒழுங்கு, குற்ற பிரிவு, போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அத்துமீறல், கார் வெடிப்பு சம்பவம், கோவையில் சதித்திட்டங்கள் போன்றவை பதற்றத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கோவையில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீஸ் பலத்தை அதிகரிக்க, ரோந்து கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்த கூடுதலாக 3 புதிய காவல் நிலையங்கள் அமைக்க முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்’ இதன்படி கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் ஆகிய 3இடங்களில் புதியபோலீஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.புதிய போலீஸ் நிலையங்களுக்கான இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள்,போலீசார் என மொத்தம் 93 பணியிடங்கள் தளப் பொருட்கள் குறித்து விவரங்களை டிஜிபி அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டது.
இது தொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- கரும்புக்கடை போலீஸ் நிலையம் ஆயிஷா மஹால் அருகிலும், கவுண்டம்பாளையத்தில் மின்வாரியத்திற்கு சொந்தமான இடத்திலும், சுந்தராபுரத்தில் வாடகை கட்டிடத்திலும் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்படும் .ஒரு வாரத்தில் புதிய போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் .இதன் மூலமாக மாநகரில் கண்காணிப்பு தீவிர படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்..