கோவை ரத்தினபுரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது ரத்தினபுரி சம்பத் வீதி பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமான வகைகள் நின்று கொண்டு இருந்தவர்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்த விற்பதற்காக நின்று கொண்டு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவை வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த சிவசங்கர் மற்றும் ரத்தினபுரி சம்பத் வீதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற டிப்ஸ கார்த்திக் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து பின்னர் அவர்கள் கூட்டாளி அபூபக்கர் என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் . மேலும் அவர்களது கூட்டாளிகளான ஆகாஷ், சிரஞ்சீவி, விவேக், சீனு கார்த்திக் ஆகிய நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.