கோவை போத்தனூர் பக்கம் உள்ள வெள்ளலூர் அவுசிங் யூனிட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போத்தனூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் யூசுப் ஆகியோர் அந்தப் பகுதியில் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா மற்றும் 59 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் போத்தனூர் கதிரவன் நகரை சேர்ந்த ஜெயிலாபுதீன் ( வயது 57 ) அஸ்லாம் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் (வயது 24) சுந்தராபுரம் ,சங்கம் வீதியைச் சேர்ந்த சரண் (வயது 21) என்பது தெரிய வந்தது .இவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.