டாஸ்மாக் பாரில் நள்ளிரவில் மது விற்பனை – 3 பேர் கைது..!

கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பேபி ரோஸி ஆகியோர் நேற்று சிங்காநல்லூர் காமராஜ் ரோடு பகுதியில் ஒரு தியேட்டர் அருகே உள்ள டாஸ்மாக் கடைப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை எண் ( 1663) பாரில் நள்ளிரவில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பார் ஊழியர்கள் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை சேர்ந்த மணி ( வயது 43) புதுக்கோட்டை மாவட்டம், குமலூர், நடேசன் ( வயது 48) சிவகங்கை மாவட்டம், அரியக்குடி கார்த்திக் (வயது 33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 196 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது..