கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை நேற்று மரக்கடை சந்திப்பில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட்கா ) மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக என்.எச். ரோடு, சந்திரன் வீதியைச் சேர்ந்த ரிஸ்வான் ( வயது 20) சி.எம்.சி காலனி ராம்சங்கர் ( வயது 21) காந்தி பார்க், தடாகம் ரோடு கவிக்குமார் ( வயது 38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 10 .9 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..
10 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது..!
