8 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது – வாகனங்கள் பறிமுதல்.!!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தி வருவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து தனிப்படை போலீசார் சோமனூர் ஆத்துப்பாலம் அருகே திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது 4 சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்ததாக சிங்காநல்லூர் கருப்பையா (வயது 42) கேரள மாநிலம் ஜூனோத் அலி ( வயது 40) ஹிபாதுலா (வயது 36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா ,நான்கு சக்கர வாகனம் – 2 பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.