கோவை போத்தனூர், செட்டிபாளையம் அருகே உள்ள மயிலேறிபாளையம், வர தோப்பு தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி புவன்யா (வயது 34) கருத்து வேறுபாடு காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புவன்யா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தந்தை ராஜேந்திரன் செட்டிபாளையம் போலீசில்புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதே போல செட்டிபாளையம் விஜயஸ்ரீ நகரை சேர்ந்தவர் ஜோதிராஜ் ( வயது 40 )இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார் . இதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானர். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ஜெயசந்தியா செட்டிபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார்.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, வேல்முருகன் நகரை சேர்ந்தவர் பாலன் (வயது 60 )இவர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அவரது வீட்டில் நைலான் கயிற்றை விட்டதில் கட்டிதூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் கார்த்திக் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.