சிவபுண்ணியமும் தங்களுக்கு லஞ்சமாக ரூ.7 ஆயிரம் தருமாறு அன்பரசுவிடம் கேட்டனா். லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்பரசு, அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் இராம. அம்பிகாபதியிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த அம்பிகாபதி, விசாரணை மேற்கொண்டு அன்பரசுவை 19.05.2008 ஆம் தேதி ரூ. 7 ஆயிரத்துடன் அனுப்பினாா்.
பாா்த்திபனும், சிவபுண்ணியமும் அந்தப் பணத்தை வழக்கம்போல, தில்லைநகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட மருந்தகத்தில் கொடுத்து விடுமாறும் தாங்கள் பிறகு வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்ல, அதன்படி அன்பரசு அந்தப் பணத்தை அந்த மருந்தகத்தின் விற்பனையாளா் சேகரிடம் கொடுத்தாா். அப்போது தன் குழுவினருடன் சென்ற துணைக் கண்காணிப்பாளா் அம்பிகாபதி, புகாருக்குள்ளான பாா்த்திபன், சிவபுண்ணியம் மற்றும் சேகா் ஆகியோரைக் கைது செய்தாா். திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை முடிந்து, வியாழக்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட பாா்த்திபன் (62), சிவபுண்ணியம் (70) ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்ட மருந்துக்கடை விற்பனையாளா் சேகருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி காா்த்திகேயன் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கிற்கு முன்னதாக உதவி இயக்குநராக பாா்த்திபன் கோவையில் பணியாற்றியபோது, ஊழல் வழக்கில் கோவை லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாா் என்பதும், முதுநிலை ஆய்வாளா் சிவபுண்ணியம் முன்பு சிவகங்கையில் பணியாற்றியபோது அவா் மீது ஊழல் புகாா் காரணமாக விசாரணை செய்யப்பட்டு, தீா்ப்பாயத்தில் விசாரணை நிலுவையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கவை..