ஒரே நாளில் சாலை விபத்தில் 3 பேர் பரிதாப பலி..

கோவை : கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியூ சிற்றம்பலம் லே-அவுட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 51) இவர் நேற்று சத்தி ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியாக வந்த மினி டோர் ஆட்டோ இவர்மீது மோதியது. இதில் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார்..

அதேபோல லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 23) இவர் நேற்று ரேஸ் கோர்ஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம்அடைந்தார்.. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார்.

இதே போல கோவை கணபதி சரவணா நகரை சேர்ந்தவர் ரவி. அவரது மகன் அசோக் பிரகாஷ் (வயது 35) நேற்று இவர் நல்லாம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள கல் மீது பைக் மோதி கீழே விழுந்தார்.அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி இவர் மீது மோதியது .இதில் அசோக் பிரகாஷ் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.