திருப்பூர் பக்கம் உள்ள தெக்கலூர், சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் கோபாலன் இவரது மகன் அருண்குமார் (வயது 24) லோடுமேன் .இவர் நேற்று கருமத்தம்பட்டி – அன்னூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பதுவம்பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மாருதி கார் இவரது பைக் மீது மோதியது. இதில் அருண்குமார் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .
இதேபோல அன்னூர் பச்சாபாளையம் பக்கம் உள்ளம் மோளபாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 45 ) அரிசி வியாபாரி. இவர் நேற்று வெள்ளானைப்பட்டி – காளப்பட்டி ரோட்டில் எலக்ட்ரிக் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு இருசக்கர வாகனம் இவரது பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது . இதில் சிவக்குமார் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து அவரது மனைவி கலைச்செல்வி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதே போல ராமநாதபுரம் மாவட்டம் ,இருமேனி, பிறப்பன் வலசை சேர்ந்தவர் சேதுபதி ( வயது 45 )கூலித்தொழிலாளி. இவர் நேற்று சூலூர் அருகே சேலம் -பாலக்காடு ரோட்டில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக வந்த பைக் சேதுபதி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..