பஸ்சில் பயணியிடம் 3 பவுன் செயின் திருட்டு – 2 பெண் கொள்ளையர்கள் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கோட்டூரை சேர்ந்தவர் கனகராஜ் .இவரது மனைவி ஈஸ்வரி ( வயது 54) இவர் பொள்ளாச்சியில் இருந்து பஸ்சில் கோவை உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்தார்.பஸ்சை விட்டு இறங்கியதும் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை காணவில்லை.  இது குறித்து ஈஸ்வரி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் ,வேடப்பட்டி பக்கம் உள்ள அந்தோணியார் நகரை சேர்ந்த ராதா ( வயது 36) திண்டுக்கல் மாவட்டம், அடியானுத்து,அசனத் புரம் முத்தப்பன் மனைவி முருகேஸ்வரி (வயது 35)ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 பவுன் செயின் மீட்கப்பட்டது.