கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியு பரமேஸ்வரன் லேஅவுட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மரகதம் ( வயது 68 ) இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து பீளமேடு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அங்குள்ள பெண்கள் கல்லூரி பஸ் ஸ்டாப்பில் இறங்கியபோது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடிவிட்டனர் .இது குறித்து மரகதம் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
அரசு டவுன் பேருந்தில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் திருட்டு..!
