கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது..!

கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 30) இவர் விளாங்குறிச்சியில் உள்ள தனியார் விடுதியில் ஊழிராக வேலை பார்த்து வருகிறார். அதே விடுதியில் சில நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரி என்ற அபி (வயது 25 )அறை எடுத்து தங்கினார். பின்னர் வெளியே சென்ற அவர்  3 பேருடன் விடுதிக்கு வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த விஷ்ணு அவர்களிடம் விசாரித்த போது உரிய பதிலளிக்கவில்லை. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் விரைந்து வந்தனர். இதை அறிந்த அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர் .ஒரு பெண் மட்டும் தப்பி ஓடிவிட்டார். விசாரணையில் அவர்கள் கோவில் பாளையத்தைச் சேர்ந்த முகேஷ் ( வயது 22) சரவணம் பட்டி அப்துல் சமது ( வயது 21 )எஸ் .எஸ் . குளத்தைச் சேர்ந்த இம்மானுவேல் ( வயது 21) ஒண்டிப்புதூர் நவீன் சக்தி (வயது 20) ஆகாஷ் (வயது 20) என்பது தெரியவந்தது .அவர்கள் கோவையில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு , பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் இருந்த 17 வயது சிறுவன் மீது குற்ற சம்பவத்தில் தொடர்பு இல்லாததால் விடுவிக்கப்பட்டார். இதில் யுகேஷ், அப்துல் சமத், இம்மானுவேல் ஆகிய 3 பேர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன இதையடுத்து 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். இதன் பேரில் பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது..