கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது மனைவி தனபாக்கியம் (வயது 68 ) இவர் 15- 7 -24 அன்று ராமநாதபுரத்தில் உள்ள சிட்டி கோ ஆபரேட்டிவ் வங்கிக்கு தன் மகனுடன் சென்றார் .அங்கு லாக்கரில் வைத்திருந்த 30 பவுன் நகையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்த போது அந்தப் பையில் நகை இல்லை. வங்கியில் திருடப்பட்டதா? அல்லது வழியில் திருடப்பட்டதா? என்பது தெரியவில்லை. இது குறித்து தனபாக்கியம் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
Leave a Reply