கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட 35 கிலோ குட்கா பறிமுதல் – வடமாநில வாலிபர்கள் 13 பேர் கைது..!

கோவை ஜூன் 30 தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடமாநிலங்கள் மற்றும் கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரெயில்கள் மற்றும் லாரிகள் மூலம் தமிழகத்திற்கு கடத்திவரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதன்படி வட மாநிலத்திலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ஒரு ரெயிலில் வட மாநில வாலிபர்கள் சிலர் சாக்கு முட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக ரயில்வே போலீசார் மற்றும் மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்தது .இதன் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து நேற்று மதியம் பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது வட மாநில வாலிபர்கள் அதிகம் இருந்த ஒரு பெட்டியில் சாக்கு முட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒடிசாவை சேர்ந்த சந்திரகுமார் ஷா (23 )பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் ( 22) மனிஷ் குமார் ( 20 ) முகமத் ரியாஸ் ( 38) முகமது இர்பான் ( 23)மூஜா ஹிட் ( 20))சந்தன் பஸ்வான் ( 39 )சாகல் சடா ( 29 ) பஷ்வான் சடா ( 21 )உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து ஏராளமான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது .இவர்கள் 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.