கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு மூடப்பட்டிருந்த செங்கல் சூளையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கபட்டது. வன அலுவலர் அருண் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அந்த செங்கல் சூளை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் ( வயது 45) என்பவருக்கு சொந்தமான என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது செங்கல் சூளைப் பகுதியில் மேலும் ஒரு நாட்டு துப்பாக்கி, ஏர்கன் ரகத்துப்பாக்கி 2, என 3 துப்பாக்கிகள் மேலும் பயன்படுத்திய தோட்டா 30 ,தோட்டா தயாரிப்பதற்காக வைத்திருந்த 350 கிராம் வெடி மருந்து ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது . 4 துப்பாக்கிகள் தோட்டாக்கள், வெடி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் தடாகம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இவர் உரிமம் பெறாமல் துப்பாக்கி பயன்படுத்தியது தெரியவந்தது. போலீசார் இவரை கைது செய்தனர்..