கோவை உப்பார வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37) இவர் நேற்று ஆர். எஸ். புரம் , கவுலி பிரவுன்ரோட்டில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார்.காய்கறி வாங்கிவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு வட மாநில வாலிபர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் ரமேசை மிரட்டி அவரிடம் இருந்த பணம் ஆயிரத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிச் செல்ல முயன்றனர். ரமேஷ் சத்தம் போட்டார். உழவு சந்தைக்கு வந்தவர்கள் அந்த 4 ஆசாமிகளையும் மடக்கி பிடித்து ஆர் .எஸ் .புரம். போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி அவர்களை கைது செய்தார். விசாரணையில் அவர்கள் ஜான்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பகதூர் மகோத்தா ( வயது 36) சந்தோஷ் மகோத்தா (வயது 33 )பாபு மகோத்தா ( வயது 23 )பீகார் மாநிலத்தை சேர்ந்த மனிஷ் மகோலி (வயது 22 )என்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து ரூ. ஆயிரம் மீட்கப்பட்டது.