கோவை இடையர்பாளையம் டி.வி.எஸ் . நகர், காமராஜரை சேர்ந்தவர் நாகராஜன் .இவரது மனைவி காவியா ( வயது 30) இவரிடம் ‘இன்ஸ்டாகிராம் ” மூலம் ஒருவர் அறிமுகமானார் .அவர் வீட்டில் இருந்து கொண்டே அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார். இதை நம்பிய காவியா பல்வேறு தவணைகளில் ரூ.25,67,50 – ஐ அந்த நபருக்கு வங்கி மூலம் அனுப்பி வைத்தார். பின்னர் அவரிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காவியா கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார் .
இதே போல கோவை செல்வபுரம்,பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக். இவரிடம் வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் பழகிய ஒருவர் பகுதி நேர ஆன்லைன் வேலை இருப்பதாககூறி ரூ. 8 லட்சத்து 7006 பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டார் .
இதே போல கோவை சரவணம்பட்டி, ராமானந்த நகரை சேர்ந்தவர் முகம்மத் அயூப் . இவரது மனைவி சுஜாதா பானு (வயது 39) இவரிடமும் இதே போல ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டி ரூ. 11 லட்சத்து 10 ஆயிரம் மோசடி நடந்துள்ளது. .இது குறித்து சுஜாதா பானு கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.
கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 7-வது கிராசை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சுசித்ரா ( 52) இவரிடமும்இதேபோல ரூ 8 லட்சத்து 11 ஆயிரத்து 700 மோசடி நடந்துள்ளது.இந்த 4 புகார்கள் குறித்தும் கோவை சைபர் கிரைம்போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.