கோவையில் எரி சாராயம் கடத்தல் – பாலியல் வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..!

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் தொடர்புடைய முருகன் மகன் விஷ்ணு (வயது 27)மற்றும் அசோக் குமார் மகன் சுரேஷ் (வயது 41)ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.கோவில்பாளையம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய முருகானந்தம் மகன் நந்தகுமார் என்ற நந்தா (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டார். பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எரிசாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பாபு மகன் பிரவீன் (வயது 38) கைது செய்யப்பட்டிருந்தார். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தொடர்ந்து இந்த செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி பாலியல் வழக்கு குற்றவாளியான விஷ்ணுமற்றும் சுரேஷ் எரிசாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கு குற்றவாளியான பிரவீன் மற்றும் வழிப்பறி வழக்கு குற்றவாளிகளான நந்தகுமார் என்ற நந்தா ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டனர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு இதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது..