வழிப்பறி நடந்த 24 மணி நேரத்தில் பெண் உள்பட 4 கொள்ளையர்கள் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது 39) இவர் கடந்த 12-ந் தேதி இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி – பாலக்காடு சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போதுஅடையாளம் தெரியாத 4 நபர்கள் திடீரென்று அவரை தாக்கி அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்- ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில்புகார் செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழிப்பறி வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் உத்தரவிட்டார் அதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று கோவை உடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஷேர்பகதூர் மகன் வினோத் (வயது 25) நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் மகன் ஸ்டாலின் ( வயது 27), பிரகாஷ் மகன் யோகேஷ் (வயது 27) மற்றும் 21 வயது பெண் ஒருவர் ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் மேற்படி நபர்களை கைது செய்து இருசக்கர வாகனம்-1 மற்றும் செல்போன்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..