நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு 43வது வீரவணக்க நாள் அனுசரிப்பு..!

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு 43வது வீரவணக்க நாள் அனுசரிப்பு..
கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி நக்சல் கும்பலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லும்போது குண்டு வீசப்பட்டு காவல் ஆய்வாளர்  பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவலு மற்றும் காவலர்கள் யேசுதாஸ், முருகேசன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ம் தேதி நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வீரவணக்கம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, 43-ஆம்ஆண்டு வீரவணக்கம் நாள் நிகழ்ச்சி (06.08.2023) அன்று திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் W.I.தேவாரம்,IPS(DGP.Retd)  , முனைவர்.M.S.முத்துசாமி IPS.,  (வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர்),  பாஸ்கரபாண்டியன் ,IAS  (திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர்), ஆல்பர்ட் ஜான்,IPS., (திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்), கிரண்சுருதி,IPS, (ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்), மணிவண்ணன்,IPS., (வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்), டாக்டர்.கார்த்திகேயன்,IPS,  (திருவண்ணாமலை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்), Dr.சசி மோகன்,IPS.,(Q-Branch), அசோக்குமார்,IPS., (RetdQ-Branch), ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட தலைவர் N.K.R.சூரியகுமார், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் கந்திலி ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், நீதித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்..