ஆனைமலையில் 4500 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் – குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை..!

தமிழ்நாடு அரசால் எரி சாராயம் காய்ச்சுவதோ விற்பனை செய்வதோ போலி மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதையும் அதிக போதை ஏற்றும் கெமிக்கலை தண்ணீரில் கலப்பதை அரசு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதை தமிழக காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்க பிரிவின் கூடுதல் இயக்குனர் முனைவர் அமல்ராஜ் தமிழக முழுவதிலும் தனிபடை அமைக்கப்பட்டு அதிரடி போலீஸ் படையினர் சோதனை வேட்டை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய எல்லைப் பகுதியில் தமிழக கேரளா எல்லைப் பகுதியில் செம்மணாம்பதி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் எரி சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக கேரள மாநில காவல் துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆனைமலை காவல்துறையினர் மற்றும் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் இணைந்து செம்மாணம் பதியில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த டோனி குரிய கோஸ் வயது 45.என்பவனுக்கு சொந்தமான தோட்டத்தில் அதிரடி சோதனை மேற்கொள்ளனர்.அப்போது அத்தோட்டத்தில் எரி சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 150 கேன் களில் பதுக்கி வைத்திருந்த 4500 லிட்டர் எரிசாரா யத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பெயரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் தொடர்புடைய நில உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சபீ ஷ் ஜேக்கப் வயது 41. என்பவன் விஷம் குடித்து கேரளாவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மேலும் தீவிர விசாரணைநடந்து வருகிறது.