திருச்சியில் 47 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் – டிஐஜி அதிரடி உத்தரவு.!!

திருச்சி காவல் சரகத்திற்குட்பட்ட திருச்சி மாநகரம் புறநகர் புதுக்கோட்டை கரூர் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 47 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாறுதல் செய்து திருச்சி சரக டிஐஜி மனோகர் உத்தரவிட்டுள்ளார். இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள்ளும், 2 பேர் வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து 6 பேர் கரூர் மாவட்டத்திற்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைவாணி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் கரூர் மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜே.கே.கோபி அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கும் அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆர்.நந்தகுமார் கரூர் மாவட்ட ஆவணப் பிரிவுக்கும் மாவட்டத்திற்குள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட ஊரகம் (க.பரமத்தி) அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வி.கவுரி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலுக்கும், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நுண்ணறிவுப் பிரிவுக்கும் என 2 பேர் வெளிமாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டள்ளனர்.
திருச்சி மாநகரம் (மாநகர குற்றப்பிரிவு) இன்ஸ்பெக்டர் வினோதினி கரூர் மாவட்ட ஊரகம் (க.பரமத்தி) அனைத்து மகளிர் காவல் நிலைத்திற்கும், திருச்சி மாவட்டம் லால்குடி இன்ஸ்பெக்டர் ஆர்.எஸ்.சரவணன் லாலாபேட்டைக்கும், புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.ஜெயராமன் தோகைமலை காவல் நிலையத்திற்கும், திருச்சி மாநகர விமான நிலைய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆர்.ராஜ்குமார் பாலவிடுதிக்கும், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி கரூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் திருச்சி மாநகர கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.அம்சவேணி கரூர் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு என 6 பேர் வெளிமாவட்டங்களிலிருந்து கரூர் மாவட்டத்திற்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி புதுக்கோட்டை கரூர் பெரம்பலூர் அரியலூர் மாவட்ட எஸ்.பி.க்கள். திருச்சி மாநகர ஆணையர் ஆகியோர் மேற்கண்ட இன்ஸ்பெக்டர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படும் நாள் மற்றும் புதிய இடத்தில் பணியில் சேரும் விபரங்களை தெரியப்படுத்துமாறு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.