நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரைப் பாலாடா பகுதியில் இயங்கி வரும் குட் ஷெப்பர்ட் சர்வதேச பள்ளியின் 48வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, பள்ளியின் 48வது ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த சி இ ஓ, இந்தியா ஆராய்ச்சி அமைப்பு ரமேஷ் கைலாசம் அவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழா துவக்கமாக பள்ளி மாணவ மாணவிகளால் மார்ச் பாஸ்ட், பேண்ட் டிஸ்பிளே, டிரம்மர்ஸ் கால், டான்ஸ் பிரசன்டேஷன், ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ், மலையேறும் திறன் காட்சி, குதிரையேற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மற்றும்
இந்நிகழ்ச்சியில் இணை நிறுவனர் .எல்சம்மா தாமஸ், தலைவர் ஜேக்கப் தாமஸ் மற்றும் மூத்த துணைத் தலைவர் . சாரா ஜேக்கப் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் இந்தியா பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தனர். ஆண்டு விழாவின் முக்கிய விருந்தினர்களாக குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வந்த முன்னாள் மாணவர்கள் அனேகர் கலந்து கொண்டனர்,நடைபெற்ற 48வது குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் விழாவில் தற்போது படித்து வரும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர். 48வது ஆண்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தலைமை விருந்தினராக கலந்து கொண்ட இந்தியா கற்பிக்கும் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரஞ்சனி ரமேஷ் பள்ளி மாணவ மாணவிகளின் விளையாட்டுத் துறை மற்றும், கல்வித்துறை, மலையேறும் திறன், மற்றும் மாணவர்களின் பல்வேறு விதமான திறமைகளை பாராட்டி கோப்பைகளை வழங்கினார். மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். எல்சம்மா தாமஸ், இணை நிறுவனர், ஜேக்கப் தாமஸ், தலைவர் மற்றும் சாரா ஜேக்கப், மூத்த துணைத் தலைவர் நிகழ்ச்சியில் உடன் இருந்தனர்.
விழாவின் சிறப்பு விருந்தினர் ரமேஷ் கைலாசம் அவர்கள் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளனதொடக்கத்தில் மாணவர்கள் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க முயற்சிகளால் ஈர்க்கப்பட்டது, தனிப்பட்ட திட்டங்கள், மற்றும் மாணவர்களுக்கு அறிவுரையில் கூறியதாவது எந்தவொரு விஷயத்தையும் பகுப்பாய்வு செய்ய வக்கீல் கொள்கையைப் பயன்படுத்தவும், எதையும் முக மதிப்பில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார். பயிற்சியாளரின் அணுகுமுறை சூழ்நிலைகளைக் கையாளுவதற்கான கூடு வழி முழுமையாக சிந்தித்து நுண்ணிய பகுப்பாய்வில் ஆழ்ந்து இருங்கள், அவர் வகுத்து செயல்படுத்திய கொள்கைகள் பலரது வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது, தற்போது நமது நாட்டில் பெருகும் மக்கள் தொகை காரணமாக வேலைக்கான தேவை கிடைப்பதை விட அதிகமாக உள்ளது. கிக் பொருளாதாரம்,தற்போது சூழ்நிலை இந்தியர்கள் கௌரவமான வேலையில் இருக்க விரும்புகிறார்கள்
இணையத்தின் குழந்தைகள் நுகர்வோர் இணைய பொருளாதாரம், செங்குத்துகளில் வேலை செய்யுங்கள் செல்வம் உருவாக்கம்
இன்று உரையில் பேசினார். தற்போதுவியாபாரம் செய்வது எளிது ஆனால் வாழ்வாதாரம் நிலைத்தன்மை தொழில்நுட்பம் 1.0 முதல் 6.0 வரை காணப்படுகிறது. யோசனைகளை யதார்த்தமாக மாற்றவும் இன்று விழா நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வலியுறுத்தினார்கூறினார்,
தொழில்முனைவில் சுயமாக ஈடுபடுங்கள்/புதுமைப்படுத்துங்கள் நிதி கல்வியறிவு கல்வியை அறிவின் ஆதாரமாகக் கருதுங்கள் என்று உரையை நிறைவு பெற்றார், ஆண்டு விழா நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட இந்தியா கற்பிக்கும் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்,ரஞ்சனி ரமேஷ் எல்சம்மா தாமஸ், இணை நிறுவனர், ஜேக்கப் தாமஸ், தலைவர் மற்றும் சாரா ஜேக்கப், மூத்த துணைத் தலைவர் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், வெளிநாடுகள் மற்றும் இந்தியா வெளி மாநிலங்கள் இருந்து பெற்றோர்கள் மற்றும் விருந்தினர்கள் திரளாக கலந்து கொண்டு 48வது குட் ஷெப்பர்ட் சர்வதேச பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பள்ளி நிர்வாகத்தையும் மாணவர்களையும் பாராட்டி சென்றனர்,.