5 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் – வடமாநில வாலிபர் கைது..!

கோவை மதுக்கரை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக மதுக்கரை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் தனிப்படை போலீசார் மதுக்கரை மார்க்கெட் அருகே சோதனை மேற்கொண்டனர். அப் போது கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அசோக் சோன்கர் மகன் வேத்பிரகாஷ் சோன்கர்(வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் கடந்த 1- ஆம் தேதி முதல் மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 66 நபர்கள் மீது 39 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 93.645 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சாசாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனஇதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, . அவர்கள்மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும. என்றுபோலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.