கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் சூலூர் ரோடு குரும்பபாளையம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஒரு வெள்ளை நிற பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகர்சாமி (வயது 56) என்பது தெரிய வந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
5 கிலோ கஞ்சா கடத்தல் – ஒருவர் கைது..!
